Recent Entries

Popular Posts

Recent Comments

Friday, August 31, 2007 1 comments

செந்தில்:மந்திரி நம்ப ஊருக்குக் கால்வாயைத் திறப்பதற்க்காக வராறாமே??

மதி :அவர் ஏன் கால்வாயைத் திறக்கிறார்? முழுவாயைத் திறக்கமாட்டாராமா??

0 comments

செந்தில் :வயித்துவலி பொறுக்கம்முடியவில்லை டாக்டர்...

டாக்டர்: வயித்துவலியின்போது ஏன் பொறுக்கப் போறீங்க????

0 comments

யுவன்: சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்

பாரதி: சின்சியரா லவ் பண்ணா டாஸ்மார்க்

0 comments

ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.

பாரதி : நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்

0 comments

அம்மா அடிச்சா வலிக்கும்
ப்ரெண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்
போலிஸ் அடிச்சா வலிக்கும்
லவ்வர் அடிச்சாக்கூட வலிக்கும்
ஆனாசரக்கு அடிச்சா வலிக்குமா???????

0 comments

அலெக்ஸாண்டர் : யுவன் என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.

யுவன்: அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

0 comments

வாங்க யுவன் வாத்தியாரே !!!

டீ கப்புல டீ இருக்கும் .. ஆனா world cup la world இருக்குமா ?

0 comments

ஆசிரியர்: ஏதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க...மாணவர்: எப்படி ஸார் வாத்தியாரா வந்தீங்க

யுவன் பிரபாகரன்☆
நீ தான் அந்த மாணவன் னு நினைக்குறேன் பாரதி

0 comments

யுவன்: சசி நீ கணக்குப் போடும் பொழுது உறுமிக்கிட்டே இருக்கியே ஏன்?

சசி: நான் தான் கணக்குல புலி ஆச்சே.

0 comments

கீ-போர்டல கீ இருக்கும்ஆனா மதர் போர்டல மதர் இருப்பாங்களா ?

0 comments

பொங்கலுக்கு அரசாங்கத்துல லீவு கொடுப்பாங்க..., இட்லி தோசைக்கு கொடுப்பாங்களா..?

0 comments

உங்களுக்கு என்ன ஆச்சு மணி.செந்தில்...நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும் ஆனா ?பேப்பர் ரோஸ்டல பேப்பர் இருக்குமா ?

0 comments

யுவன் : ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன் .. ..* கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க .. ..

புவனா : ஏன் .. .. ?

யுவன் : பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்

0 comments

நாயிக்கு நாலு கால் இருக்கலாம் ...ஆனா. அதால லோக்கல் கால்,STDகால் ISDகால்ஏன் ஒரு மிஸ்டு கால் கூட செய்ய முடியாது...

0 comments

சசி : அடடா...உங்க பையனுக்குத் தலை முழுவதும் காயமா இருக்கே..எப்படி ஆச்சு.?"

அபி : கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுனு சொன்னேன். அதைஅவன் தப்பாப் புரிஞ்சுக்கிட்டான்..

0 comments

பகுத்தறிவு :புத்தகத்துக்கும் கடிதத்துக்கம் என்ன வித்தியாசம் ?

சசி : தெரியலையே *

பகுத்தறிவு :புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்.

0 comments

யுவன் : சசி என்ன படிச்சுருக்க ?

சசி : BA

யுவன் : படிச்சதே ரெண்டு எழுத்து அத தலைகீழ வேற படிச்சியாக்கும்

0 comments

சசி : கிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா ?

யுவன் : ?????????????????????

0 comments

டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?

அப்படியா? சும்மாவா இருந்தீங்க..

இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.

0 comments

செந்தில்:இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டாவை பார்த்துகிட்டே இருக்கான்

யுவன் : அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.

0 comments

விக்ரம்: மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க.....
சசி: எப்படி சொல்ற
விக்ரம்: நான் தினமும் அணையை பார்க்கிறேன். அணை கட்டினது எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கு.

0 comments

பாரதி:பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன்

மதி :சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க?

பாரதி :சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க

0 comments

மகனிடம் தந்தை :யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியா தை குறைவா பேசக்கூடாது?

மகன் : சரி, டா டி

0 comments

ஆசிரியர்: உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?கையை நீட்டு...?

மாணவன் : நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!

0 comments

சசி:பேங்கில் பணம் எடுக்க போனவருக்கு ஷாக் அடித்துவிட்டதாம்

மணி.செந்தில்:ஏன்??


சசி:கரண்ட் அக்கவுண்ட்ல இல்ல பணம்எடுக்க போனாரு!!!

0 comments

கடி

சசி : இட்லி சாப்டா இருக்குமா?????

யுவன் :சாப்டா இட்லி இருக்காது வயித்துக்குள்ள போயிடும்

0 comments

''உங்க ஊர்லே சமையலுக்கு ஆள் கிடைக்குமா''

''ஆளெல்லாம் கிடைக்காதுங்க! காய்கறிதான் கிடைக்கும்!

0 comments

மருத்துவர்: இவரை நீங்க ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்து இருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்.


உடன் வந்தவர்: கொண்டுவந்திருக்கலாம்; ஆனா இவருக்கு விபத்து ஏற்பட்டே அரைமணி நேரம்தானே ஆகுது?மருத்துவர்: ??????

0 comments

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!!

பொங்கலுக்குஎடுத்ததா?

பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.வடிவேல் : ?!?!

0 comments

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர்

எங்கஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

0 comments

மக்கள் தொகை பெருக்கம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் சொன்னார்.

“இந்தியாவில் 10 விநாடிகளுக்கு ஒரு பெண் குழந்தை பெறுகிறாள்”

உடனே பாலாஜி எழுந்து “ அந்த பெண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சு, நிறுத்தச் சொல்லணும்” என்றாரே பார்க்கலாம்.